ஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஆவினில் கடந்த 2020,2021 ஆம் ஆண்டு மேலாளர், எக்சிகியூட்டிவ் உட்ப்பட 61 பணியிடங்கள் நிரப்பபட்டன. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு முறைகேடாக பணி நியமனம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையிலான குழு 2 முறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
மேலும், கூட்டுறவு சங்கங்கள் சட்டம் 81, படி ஆவின் பால்வளத்துறை துணை பதிவாளர் கணேசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் எஸ்பி ஜெயலெட்சுமி தலைமையில் இரண்டு நாட்களாக விசாரணை தொடர்ந்தது.
இந்நிலையில் துணை பதிவாளர் கணேசன், 2020, 2021 மதுரை பணி நியமனம் செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பபட்டு உள்ளது. பணி நியமம், கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து வகையில் ஒரிஜினல் சான்றிதழை ஆவணங்களை சமர்ப்பித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
                               
                  












; ?>)
; ?>)
; ?>)