மதுரையில் வருகின்ற ஜூன் 4 மற்றும் 5ம் தேதி துறவியர் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு குறித்து மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;
விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை மூலம் மாநில மாநாடு வரும் ஜீன் 4மற்றும் 5ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய, மாநில அளவில் உள்ள துறவிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.அறநிலையத்துறை தனித்து இயங்கும் வாரியமாக மாற வேண்டும், கோவில்களில் நிலவும் பிரச்சனைகளை சிந்தித்து தீர்வு காண வேண்டும். ஆன்மீகத்தில் பாரத நாடு உலகத்திற்கு வழிகாட்டியாக உள்ளது.
குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு ஆன்மீகத்தை கொண்டு சேர்ப்பதற்கான நெறிமுறையை துறவிகள் வகுக்க உள்ளோம்.சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைவரும் இணைந்து செயல்படுவது குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் துறவிகள் பேச உள்ளோம்.
சுகந்நிர இந்தியாவில் இருந்த மக்கள் தொகைக்கும், நாட்டில் தற்போது நிலவும் இந்து மக்கள் தொகைக்கு பெரிய வேறுபாடு உள்ளது.மாநாட்டில் மதமாற்றத்தை தடுப்பது, தாய் மதம் திரும்பியவர்களை வரவேற்பது, பசுக்களை பாதுகாப்பது, ஆன்மீக சிந்தனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து துறவிகள் சிந்திக்க உள்ளோம்.
5ம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து ஆதினங்களும், சங்காராச்சாரியரும் கலந்து கொள்ள உள்ளனர்.
பாஜகவுக்கு கொள்கை கொடுத்ததே துறவிகள் தான். எங்களுடைய கொள்கைகளை தான் பாஜகவினர் பேசுகின்றனர்.துறவிகள் மாநாடு கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நடைபெற்றுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை தனி வாரியமாக இருந்தது என்றால் கல்லி மருத்துவம் உள்ளிட்ட சேவை பணிகளை செய்ய முடியும்.
எல்லோருக்கும் தனித்தனி வாரியம் உள்ளது. மற்ற மதத்தினருக்கு தனி சலுகைகள் உள்ளன.
கோவில் நிலங்களை மிட்டெடுப்பதில் இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது.கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உடனடி அனுமதி வழங்குகின்றனர்.இந்து சமய அறநிலையத்துறை நல்ல பணிகள் செய்து கொண்டுள்ளனர். இந்து சமயநிலையத்துறை செயல்பாடு திருப்திகரமாக உள்ளது.