• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இனி சைவ ஹோட்டல்களிலும் ரெய்டு…

Byகாயத்ரி

May 13, 2022

அசைவ உணவுகளை அன்றைய தினத்திற்கு தேவையாவற்றை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தங்க விக்னேஷ் சைவ உணவுகள் குறித்தும் சோதனை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அனைத்து கடைகளில் சிக்கனோ, மட்டனோ எந்த அசைவ உணவுகள் வாங்கினாலும் அந்த நாளுக்கு தேவைக்குரியவற்றை மட்டும் வாங்க வேண்டும்.

அதையும் பில் கொடுத்து வாங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் இதுவரை 23 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாவட்ட முழுவதுமாக 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ரெய்டு நடந்து கொண்டிருக்கும். இனி சைவ உணவுகளே ஹோட்டல்களிலும் ரெய்டு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.