

உலகின் மிகப்பெரிய வெள்ளை நிற வைரம் சுமார் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் என கருதப்படும் இந்த தி ராக் என்று அழைக்கப்படும் 228.31 காரட் வெள்ளை வைரம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவரை நடந்த வரலாற்றிலேயே அதிக அளவில் ஏலம் போனது இந்த வைரம் தான்.
இந்த வைரம் சுவிட்சர்லாந்தில் வந்த நிலையில் சுமார் 169 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 590 ரூபாய்க்கு ஏலம் போனது. இதுபோன்ற ரெட் கிராஸ் என்று அழைக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மஞ்சள் நிறமானது 110 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக ஏலம் போனது என்பது குறிப்பிடதக்கது.