• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

செம்மரக்கட்டைகள் கடத்தல்: 7 தமிழர்கள் கைது

ByA.Tamilselvan

May 10, 2022

ஆந்திர மாநிலம் மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் தமிழர்கள் 7 கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகன தணிக்கையில் ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் வெட்டுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அவர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்ப்போது 3 வாகனங்களில் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனஅவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? இவர்களுக்கும் செம்பரக்கடத்தல் கும்பலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? முக்கிய குற்றவாளி யார்? இங்கிருந்து கட்டைகளை எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தக்கூடிய நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.