• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசை கண்டி கண்டித்து மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

Byadmin

Jul 19, 2021

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஜூலை 19 ஆம் தேதியான இன்று ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்சார மசோதா 2021 மத்திய அரசு கைவிட வேண்டும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை சிறு சிறு துண்டுகளாக்கி யும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020 திரும்பப் பெற வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அச்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் கூட்டுக்குழு சங்க உறுப்பினர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.