• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தளபதி 66-இல் இணையும் சார்மிங் ஹீரோ!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தளபதி 66 படத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் சார்மிங் ஹீரோவாக வலம் வந்த ஷ்யாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை உறுதி படுத்தும் வகையில், நடிகர் ஷ்யாமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.