

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அதே சீசனில் நடிகர் தர்ஷனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் லாஸ்லியாவுக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடிகை லாஸ்லியா நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தற்போது மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற திரைப்படம் தமிழில் கூகுள் குட்டப்பன் என்று ரீமேக் செய்யப்படுகிறது. இதனை கேஎஸ் ரவிக்குமார் தயாரித்திருக்கிறார். லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. என்ன படம் மே 6ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.