• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

4 வது நாளாக தங்கம் விலை குறைந்தது

ByA.Tamilselvan

Apr 26, 2022

தினசரி விலையேற்றத்தை சந்தித்த தங்கம் விலை 4 வது நாளாக விலை குறைந்து வருகிறது.40 ஆயிரத்தை தாண்டிசென்று கொண்டிருந்த தங்கம் விலைதொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது
உக்ரைன் மீது ரஷ்யா 50 நாட்களுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது இதனால் உலகம் முழுவதுமே பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை ,பாகிஸ்தான் போன்ற நாடுகள் கடும் பொருளாதார விழ்ச்சியை சந்தித்துவருகின்றன.கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதனால்இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது.கடந்த சில நாட்களுக்கு பின்னர் குறையத் தொடங்கியது. 4-வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4881-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39048-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42240-க்கு விற்பனையாகிறது.
தொடர்ந்துகுறையுமா அல்லது மீண்டும் உச்சத்தை தொடுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.