• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பிரான்ஸ் அதிபர் தேர்தல்.. தமிழகம் புதுச்சேரியிலும் வாக்குபதிவு

ByA.Tamilselvan

Apr 24, 2022

பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகம் புதுச்சேரியிலும் மற்றும் கேரளாவிலும் நடைபெறும் வாக்குபதிவு நடக்கிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் மரைன் லு பென் ஆகியோர் களத்தில் உள்ளனர்
பிரான்ஸ் சட்டப்படி அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டிற்கு வெளியே உள்ள ஆளுகைக்கு உட்பட பிராந்தியங்களில் வசிக்கும் மக்களும் வாக்களிக்கலாம். அந்த வகையில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் உள்ள பிரான்ஸ் குடிமக்கள் வாக்களிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள மொத்தம் 4564 பிரான்ஸ் குடிமக்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
இதற்காகப் புதுச்சேரியில் இரு வாக்குப்பதிவு மையங்களும், சென்னை மற்றும் காரைக்காலில் ஒரு வாக்குப்பதிவு மையத்தையும் பிரான்ஸ் தூதரகம் ஏற்படுத்தி உள்ளது.. இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பிரான்ஸ் குடிமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 18 வயதைத் தாண்டிய பிரான்ஸ் குடிமக்கள் வெளிநாட்டில் வசித்தாலும், அவர்கள் அனைத்து தேர்தல்களிலும் வாக்களிக்கலாம்.