• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கு திருஷ்டி சுத்திய ராஷ்மிகா.!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். தமன் எஸ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜையில் நடிகர் விஜய், தமன், இயக்குனர் வம்சி, நடிகை ராஷ்மிகா, தில் ராஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

விஜய்யுடன் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை ராஷ்மிகாவிற்கு நிறைவேறியுள்ளது.இதனையடுத்து, இன்று பூஜையில், கொண்டாட்டத்தின் உச்சியில், பூரிப்புடன் விஜயை பார்த்து சிரித்தவாறு ஸ்டில் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.