• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கிருத்திகா உதயநிதியின் பட ஃபர்ஸ்ட் லுக், பாடல் வெளியீடு!

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியுள்ள பேப்பர் ராக்கெட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது அவர் பேப்பர் ராக்கெட் என்ற நேரடி ஓடிடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி 5 தளத்தில் இந்த படம் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் காலை மாலை என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது!