• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரசுப்பள்ளியில் பேய் ஓட்டிய சாமியாரால் பரபரப்பு

அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பேய் ஓட்டிய சாமியாரால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை கொட்டபுத்தூர். இங்கு அரசு உண்டு உறைவிட மலைவாழ் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது . இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கேயே தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த 10 மாணவிகளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதை அடுத்து மாணவிகள் கரியாலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளனர். பின்னர் நேற்று காலையில் அவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள்.

அந்த பள்ளியில் படித்த சில மாணவிகள் ஏற்கனவே இதுபோல் அடிக்கடி மயக்கம் அடைந்ததாகவும், சில மாணவிகள் தன்னைத்தானே கிழித்துக் கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் பேச்சு இருக்கிறது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பேய் பிடித்துள்ளதாகவும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

இதன்பின்னர் பேயை விரட்டுவதாக சொல்லி அப்பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கிறார். அவர் மாணவிகளுக்கு விபூதியை தலையில் போட்டு பேயை ஓட்டியதாக செய்திருக்கிறார். இதனால் மாணவிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்து இருக்கிறார்கள்.

அப்பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள், ”பள்ளிக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை. விடுதிகளிலும் இரவு நேரங்களில் ஆசிரியர்கள் சரியாக தங்குவதில்லை. இதனால் சில இளைஞர்கள் விடுதியின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மாணவிகளை கிண்டல் செய்கிறார்கள். இதனால் அவமானம் தாங்காமல் மாணவிகள் கைகளை கிழித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பேய் பிடித்துவிட்டதாக கதை கட்டி விடுகிறார்கள்.

அதனால்தான் விடுதிகளில் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.