• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பெண்களால் முடியாது எனும் பொதுப்புத்தி மாற வேண்டும் – ராஜுமுருகன்

எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘கள்ளன்’. இப்படத்தில் கரு.பழனியப்பன், நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் விநியோகஸ்தர் குமரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். வரும் 18-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா 12.03.2022 மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குநர் ராஜு முருகன் பேசும்போது, ““ஒரு சின்ன படத்திற்கும், பெரிய படத்திற்கும் ஒரே ஒரு ஷோதான் வித்தியாசம், அந்த இடைவேளையில் சின்ன படம் பெரிய படமாகிவிடும். பெரிய படம் சின்ன படமாகிவிடும். இந்தப் படம் கண்டிப்பாக பெரிய படமாக மாறும்.

சந்திரா மேடத்தை பத்திரிக்கையில் வேலை பார்த்த நாள் முதல் தெரியும். அவரின் சினிமா கனவும், அவரது போராட்டமும் எனக்கு தெரியும். அவர் படத்தில் “பாடல் எழுத வாய்ப்பு தாருங்கள்…” என்று கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். சந்திராவின் கோபம் ஒரு அர்த்தமுள்ள படைப்பாக மாறியுள்ளது. மிக வித்தியாசமான ஒரு படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார். அவர் ஒரு காதல் படம் எடுப்பார் என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன், ஆனால் அவர் எழுதியிருக்கும் திரைக்கதையே என்னை அதிர்ச்சியடைய வைத்தது. பெண்களால் முடியாது எனும் பொது புத்தி இன்னும் மாறவில்லை. அதை இந்தப் படம் மாற்றும் என்று நான் நம்புகிறேன். இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும்…” என்றார்.