• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

லெஜெண்ட் படத்தில் ராய் லட்சுமி?

அருள் சரவணன் நடித்து வெளியாகவுள்ள தி லெஜெண்ட் படத்தில் ராய் லட்சுமி ஒரு பாடலுக்கு நடனமாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக தனது நடிப்பு மற்றும் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை உருவாக்க தொடங்கினார். இதை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கிய ஜெரி அண்ட் ஜெரால்டு இயக்கும் நிலையில், நடிகர் பிரபு, மறைந்த நடிகர் விவேக், மாடல் கீத்திகா திவாரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இடையே கொரோனா காரணமாக ஷூட்டிங் ரத்து, நடிகர் விவேக்கின் மறைவு ஆகியவற்றால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்த படத்தில் ஒரு குத்து பாடலுக்கு நடிகை ராய் லட்சுமி ஆடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.