• Tue. Apr 30th, 2024

சுவீடனில் தென்பட்ட துருவ ஒளி…

Byகாயத்ரி

Mar 9, 2022

வடக்கு சுவீடனில் அந்நாட்டு நேரப்படி இரவு 7.30 மணியளவில் ஒரு ஒளி பச்சை, டார்க் பின்க், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் தென்பட்டது. நள்ளிரவுக்கு முன்பாக 4 முறை துருவ ஒளி தென்பட்ட நிலையில் அவற்றுள் பச்சை நிற ஒளி மட்டும் அதிகபட்சமாக 1 மணி நேரம் நீடித்ததாக உள்ளூர் புகைப்பட கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். துருவ ஒளி மிக வேகமாக அசைந்ததாகவும், அனைத்து திசைகளில் இருந்தும் அந்த ஒளியை காணமுடிந்ததாகவும் கூறிய அந்த புகைப்பட கலைஞர், தன் வாழ்நாளில் தான் கண்ட சிறப்பான காட்சி அது தான் எனவும் கூறி வியந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *