• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு…

Byகாயத்ரி

Mar 9, 2022

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் இன்று மனு அனுப்பினார். அதனை பரிசீலித்த முதல்வர், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவரது பருவகாலம் நீட்டிக்கப்பட்டு இறுதியாக கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி ஒன்பதாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டு தற்போது பிணையில் வெளியில் உள்ளார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கு விசாரணையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.