• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தேனி: பத்ரகாளியம்மன்
கோயில் கும்பாபிஷேகம்

தேனியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், வெற்றிக் கொம்பன் விநாயகர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

தேனி பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ளது, ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில். மிகவும் சக்தி வாய்ந்த இக்கோயில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைக்கு சொந்தமானது. இக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மார்ச் 1ல் யாக பூஜை துவங்கியது. நேற்று (பிப்.4) காலை 8:30 மணிக்குள் வெற்றிக் கொம்பன் விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும், அதனை தொடர்ந்து பத்ரகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் கோபுர கலசத்தில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி இந்து நாடார்கள் உறவின் முறை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேனி மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.