• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சூப்பர் சிங்கரில் இருந்து நீக்கப்பட்ட பிரியங்கா!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா. இவரது பேச்சிற்கும், சிரிப்பிற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் அவரே தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதற்கிடையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை மாகாபா மற்றும் மைனா நந்தினி இருவரும் தொகுத்து வழங்கினர்.

இந்நிலையில் பிக்பாஸ் முடிவிற்குப் பிறகு பிரியங்கா மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் மீண்டும் மைனா நந்தினியே தொகுப்பாளினியாக மாற்றப்பட்டுள்ளார்.

பிரியங்கா தனது பிக்பாஸ் நண்பர்களாக பாவனி, அபிஷேக், மதுமிதா, அமீர் ஆகியோருடன் ஹைதராபாத் சென்றுள்ளாராம். கடந்த வாரம் வரை பிரியங்கா வரவில்லையாம். இவ்வாறு அடிக்கடி பிரியங்கா நிகழ்ச்சியில் இருந்து பிரேக் எடுப்பத்தால் இந்த சீசன் முடியும் வரை மைனா நந்தினியே தொகுப்பாளினியாக வைத்து முடித்துவிடலாம் என நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது