• Fri. Apr 26th, 2024

ஹோலி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்…

Byகாயத்ரி

Mar 4, 2022

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலத்தினர் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4, 11, 18, 25-ந் தேதி, ஏப்ரல் 1-ந் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளி) இரவு 11:30 மணிக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06522) ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி நிலையங்களில் நின்று, ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா, நெல்லூர் வழியாக, வடமாநிலங்கள் 2 நாட்கள் பயணம் செய்து 3-வது நாள் (ஞாயிறு) இரவு 11 மணிக்கு பீகார் மாநிலம் பரூனி சென்று சேரும்.

மறுமார்க்கமாக மார்ச், 8, 15, 22, 29, ஏப்ரல் 5-ந்தேதி செவ்வாய் மாலை 4:30 மணிக்கு புறப்படும். வியாழன் மதியம் 2:30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் முதல் வகுப்பு ஏ.சி., பெட்டி ஒன்று, 2 மற்றும் 3-ம்வகுப்பு ஏ.சி., படுக்கை வசதி, முன்பதிவு பெட்டி என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *