• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மேற்கூரை விழுந்ததில் ஓதுவார் பள்ளி மாணவன் காயம்!

Byகுமார்

Mar 1, 2022

மதுரை மேலச்சித்திரை வீதியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தங்கும் விடுதியில் ஓதுவார் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 7 மாதங்களாக அங்கு தங்கி ஓதுவாராக பயிற்சி பெற்று வரும் முதலாம் ஆண்டு மாணவன் ஜெயராமன் எனும் 16 வயது மாணவன் தலையின் மீது விடுதியின் மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்தது! இதனை தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.

மேலும் தங்கும் தங்கும் விடுதியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பயின்று வரும் மாணவர்கள் அச்சத்துடனே இருந்து வருவதாகவும் தொடர்ந்து கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.