• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கோர விபத்தில் அண்ணன், தம்பி உடல் நசுங்கி பரிதாபமாக பலி!..

By

Aug 21, 2021

இரு சக்கர வாகனத்தில் வந்த அண்ணன்,தம்பி இருவர் மீது அரசு பேருந்து ஏறியதால் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலி.

கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை மஞ்சாடி பகுதியை சேர்ந்தவர் சசி. இவருடைய மகன் ஷாஜின் (18). இவர் தனது சகோதரிக்கு வருகிற ஞாயிற்று கிழமை திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதால் முன்னேற்பாடுகள் செய்ய தனது சித்தி மகன் மெர்லின் (18) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் களியக்காவிளை ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, 3 நசீர் என்பவர் எதிரே உள்ள தனது கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஷாஜினியின் இருசக்கர வாகனம் நசீர் மீது மோதியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் கீழே விழுந்ததில் பேருந்தின் பின்பக்க சக்கரம் இருவர் மீதும் ஏறியது.

இந்த கோர விபத்தில் மெர்லின், ஷாஜின் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த நசீர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், விபத்து குறித்து களியக்காவிளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.