• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நீளம் குறைக்கப்பட்டதா வலிமை?

நடிகர் அஜித் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின், உலகம் முழுவதும் பிப்., 24ம் தேதி வெளியானது.

மேலும், இந்தப் படத்தில் பைக் சேஸிங், சண்டைக் காட்சிகள் மிகவும் அற்புதமாக எடுக்கப்பட்டிருப்பாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதுவரை வெளியான அஜித் படங்களில் இதுவே அதிக வசூல் செய்தப் படமாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘அண்ணாத்த’ (ரூ.35 கோடி) மற்றும் ‘மாஸ்டர்’ (ரூ. 34.80 கோடி) ஆகிய படங்களின் வசூல் சாதனையையும் ‘வலிமை’ முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள், விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் ‘வலிமை’ படத்திலிருந்து 12.5 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட புதிய வெர்ஷன் இன்று முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.