• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அழகுக்கான ஆபரேஷன் ஆபத்தில் முடிந்தது!

ரஷிய நாட்டினை சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை யூலியா தாராசெவிச் (Yulia Tarasevich). இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற Mrs.ரஷியா இன்டர்நெஷனல் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை வென்றார்.

சமீபத்தில் தனது முக அழகை அதிகரிக்க 3 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,25,891) தொகை செலவழித்து அறுவை சிகிச்சை செய்தார். ஆனால், அறுவை சிகிச்சை செய்து முடித்த பின்னர், யூலியாவின் முகம் உருமாற்றம் அடைந்துள்ளது. மேலும், அவர் தனது கண்களை மூட இயலாமலும், சிரிக்க இயலாத வகையிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை அறுவை சிகிச்சை தவறாக சென்றுள்ளதை உணர்ந்த நிலையில், தனக்கு சிகிச்சை செய்த மருத்துவமனை நிர்வாகம் 20 ஆயிரம் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், மேற்படி ஆகும் மருத்துவ செலவுகளையும் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது 43 வயதாகும் நடிகை யூலியாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடிகை கூறுகையில், “நான் மேலும் அழகாவேன் என நினைத்து செய்து கொண்ட அறுவை சிகிச்சை, எனக்கு பெரிய இழப்பை தந்துள்ளது. அதனால் எனது உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.