• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்!

Byadmin

Feb 18, 2022

-சிபி

தமிழகத்தில் நாளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன இதில் 140 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும் பொதுமக்கள் வாக்கு அளிப்பதற்கு 38 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் இருந்து 38 வாக்கு சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்கு சாவடி மையங்களுக்கு லாரிகள் கொண்டு செல்லப்பட்டது,

இதே போன்று பண்ணைக்காடு பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளது, இதில் 38 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் 4 வாக்கு சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்காக 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியிலும் அமர்த்தப்பட்டுள்ளது.