• Tue. Sep 29th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இளம் மேயருக்கும், இளம் எம்.எல்.ஏவிற்கும் விரைவில் டும் டும்..

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. திருமணம் தொடர்பாக இரு வீட்டாரும் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதம் கழித்து திருமணம் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் இருவரும் எஸ்.எப்.ஐயில் இருந்தபோது நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். சச்சின் தேவ் SFI மாநில செயலாளராக இருந்த போது, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாலுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கோழிக்கோடு நெல்லிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் தேவ். தற்போது SFI அகில இந்திய இணை செயலாளராக உள்ளார்.

சச்சின் தேவ் கோழிக்கோடு அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், கோழிக்கோடு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றவர். 21 வயதில் ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரம் மேயரானார். திருவனந்தபுரத்தில் உள்ள ஆல் செயின்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் போது, ஆர்யா இளம் மேயர் ஆனார்.