• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆப்கானிஸ்தான் நிலை குறித்து 21 நாடுகள் கூட்டறிக்கை!..

By

Aug 18, 2021

ஆப்கானிஸ்தான் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை அனுமதிப்பாக UAE விளக்கம் அளித்துள்ளது.