• Sat. Apr 27th, 2024

ஆப்கானில் அத்யாவசிய பொருட்கள் விலை 4 மடங்கு உயர்வு!..

By

Aug 19, 2021

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்யாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

“ஆப்கனை தாலிபான்கள் பிடித்த உடனே அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. முன்னர் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிய பொருட்களை தற்போது 4 ரூபாய் கொடுத்து வாங்குகின்றோம். பகலான் மாநிலம் 3 மாதங்களாக தாலிபான்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அப்போது கூட தொழில்கள் அனைத்தும் அமைதியான முறையில் நடைபெற்று வந்தன. அவர்கள் ஆப்கன் முழுவதையும் பிடித்த நாள் முதல் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது” என்று ஆப்கன் மக்கள் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *