• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வைகை புயலை இயக்கவுள்ளாரா ஜி.வி.எம்?

வடிவேலுவை வைத்து நகைச்சுவைப் படம் எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! காதல் படங்களில் இயக்கி பிரபலமான கௌதம் மேனன், வடிவேலுவை வைத்து ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் படத்திற்கான ஸ்கிரிப்டை உருவாக்காததால் தற்போது இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். மேலும், இது உண்மையா என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த விஷயம் வடிவேலுக்கே தெரியாதாம். அவர் இன்னும் வடிவேலுவை சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், வடிவேலுவை வைத்து கவுதம் மேனன் படம் இயக்கபோவதாக ஏற்கனவே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

மேலும், வடிவேலுவின் காமெடி நீண்ட கால இடைவேளை என்பதால் ரசிகர்கள் அதனை எதிர்பாத்து ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையில், கவுதம் மேனன் தற்போது சிலம்பரசனுடன் இணைந்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் பிசியாக வருகிறார்.

மேலும், வடிவேலு “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தில் தீவரமாக நடித்து வருவதால் தற்போது பிஸியாக இருக்கிறார். வடிவேலு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு வருகிறார். மேலும் அவரை மீண்டும் பெரிய திரைகளில் பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.