மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் . இந்த படத்தை ஏப்ரல் மாதம் கட்டாயமாக வெளியிடுவோம் என்று படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் இப்படத்தில் நடிப்பதற்காக 3.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளார். மற்ற படங்களில் 2 கோடி மட்டுமே வாங்கிய இவர் தற்போது அதிக சம்பளம் வாங்கியதால் மகிழ்ச்சியில் இருப்பதாக ேசினிமா வட்டாரங்கள் கூறிகிறது.