• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிஞ்சிலேயே பழுத்த காதல்… பரலோகம் சென்ற இளைஞர்

காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். பெயிண்டரான இவர் அந்த பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் பழகி வந்தது பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து, வெங்கடேஷை மாணவியின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷை மாணவியின் தந்தை மற்றும் அத்தை தாக்கியதில் வெங்கடேஷ் படுகாயமடைந்தார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மாணவின் தந்தை மற்றும் அத்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.