• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

துப்பாக்கிச் சூடு எதிரொலி.. ஓவைசி நலனுக்காக 101 ஆடுகள் பலி

அசாதுதீன் ஓவைசி நலனுக்காக 101 ஆடுகள் பலியிட்டு அவரது ஆதரவாளர்கள் வேண்டுதலில் ஈடுபட்டனர். உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இருந்து சமீபத்தில் டெல்லி சென்ற அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி கார் மீது, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் காயமின்றி தப்பினார். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்குவதாக மத்திய அரசு கூறியது. எனினும், ஓவைசி அதனை ஏற்க மறுத்து விட்டார். இதனிடையே, ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக, நொய்டாவைச் சேர்ந்த சச்சின், சஹரான்பூரைச் சேர்ந்த ஷூபம் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவரின் இந்து விரோத பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரது வாகனத்தைச் சுட்டதாக கைதான இருவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் ஓவைசிக்கு நீண்ட ஆயுள் வேண்டி ஹைதராபாதில் நேற்று 101 ஆடுகள் பலியிடப்பட்டன.ஆடு பலியிடும் நிகழ்வுக்கு தொழிலதிபர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். ஓவைசி கட்சியின் எம்.எல்.ஏ., அகமது பலாலா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.