• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தீவிர வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள்!

Byகுமார்

Feb 6, 2022

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தமிழ் மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.

இதை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இன்று பணி சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துவிட்ட நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் அரசியல் கட்சிகளின் அந்தந்த வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

அதேபோல் மதுரை மாநகராட்சி 61வது வார்டு எஸ் எஸ் காலனி பகுதியில் திமுக வேட்பாளர் செல்வி செந்தில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை மாநகராட்சி 74 வது வார்டில் திமுக வேட்பாளர் எஸ்வி சுதன் மற்றும் அதிமுக வேட்பாளர் சாலை முத்து இருவரும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் மதுரை மாநகராட்சி, தேர்தல் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியது.