• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Feb 3, 2022

காளான் கிரேவி:

தேவையான பொருட்கள்:

காளான் – 1 பாக்கெட், மஞ்சள் தூள் – 1ஃ4 டீஸ்பூன், மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்

அரைப்பதற்கு…
வெங்காயம் – 1 தக்காளி – 2 பட்டை – 1 இன்ச் துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் – 1 கிராம்பு – 2 சீரகம் – 1 டீஸ்பூன் சோம்பு – 2 சிட்டிகை கொத்தமல்லி – சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டூ பேஸ்ட் சேர்த்து வதக்கி, காளானையும் உடன் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், காளான் கிரேவி ரெடி