• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில்வே வளாகத்தில் ஆர்ப்பாட்டம்!

Byகுமார்

Feb 3, 2022

மதுரை ரயில் நிலையம் பின்புறம் உள்ள மேற்கு நுழைவு வாயில் பகுதியில் சிஐடியு டாக்சிக் ரயில்வே ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தின் போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நீண்ட காலமாக உள்ள ரயில்வே காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ரயில் நிலையங்கள், ரயில்வே பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும். காலாவதியான அங்கீகார சங்கத்தை ரத்து செய்து சங்க தேர்தல் விரைவில் நடத்த வேண்டும்.

ரயில்வே மருத்துவமனைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு வேண்டும். மதுரை-ராமேஸ்வரம் மதுரை- கோயம்புத்தூர் வழித்தடங்களில் அதிக ரயில்களை இயக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கோட்ட ரயில்வே ஊழியர்கள் சங்க கோட்டத் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.