• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கட்டுப்படாத இரண்டு யானைகள் கரோலில் அடைப்பு ..

ஆனைமலை புலிகள் காப்பகம் உலர்ந்தி டாப்சிலிப் பகுதியில் பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத இரண்டு வளர்ப்பு யானைகள் கரோலில் அடைப்பு.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் கும்கி கலிம் சின்னதம்பி, அரிசி ராஜ என இருபத்தி ஏழு வளர்ப்பு யானைகள் வனத்துறையினர் பராமரிக்கப்பட்டு வருகிறது.டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் இருந்து அசோக் (வயது 12) சுயம்பு (வயது 23) ஆகிய இரண்டு யானைகளையும் பாகன் கட்டளைக்கு கீழ் படியாததால் வரகளியாறு யானைகள் முகாமில் லாரி மூலம் கொண்டு சென்று கரோலில் வைத்து சுமார் ஒரு மாதம் பழக்க படுத்த கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் துணை கள இயக்குனர் அறிவுறுத்தலின்படி வனச்சரகர் காசிலிங்கம் முன்னிலையில் கரோலில் அடைக்கப்பட்டது.

அசோக் யானைக்கு மணிகண்டன்,கண்ணண், ஆகிய இருவரையும் பாகன்களாக நியமனம் செய்தும் பணிபுரியவும், சுயம்பு யானைக்கு பிரசாத், சுரேஷ் இருவரையும் பாகன்களாக நியமனம் செய்து பணிபுரிய வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் ஆலோசனையின் பேரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அசோக் யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகன் ஆறுமுகம் என்பவரை கொன்றது குறிப்பிடத்தக்கது.