• Fri. Mar 29th, 2024

தங்கக்கட்டி விற்பனையில் மோசடி செய்த மூவர் கைது!

Byadmin

Jan 28, 2022

பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் தங்கக்கட்டி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முதலிப்பாளையம் சேர்ந்த நெசிலா. இவரது கணவர் ஷேக் அலாவுதீன், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் லேத் வொர்க் ஷாப் தொழில் செய்து வருகிறார்! கடந்த 20ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் நெசிலாவை தொடர்பு கொண்டு தான் கூலி மண் அள்ளும் தொழில் செய்து வருவதாகும் மண் அள்ளும் பொழுது தனக்கு தங்கக்கட்டி கிடைத்துள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் எனவும் தனக்கு பத்து லட்சம் தந்தால் போதும் என தெரிவித்துள்ளார், இதையடுத்து நெசிலா தனது கணவர் செய்வதுடன் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் சென்றபோது அங்கு வந்த மர்ம நபர்கள், நெசிலாவிடம் இருந்த 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு, மீதித் தொகையை விரைவாக தரும்படியும் தங்கக் கட்டியை ஒப்படைத்துள்ளார்.

தங்கக் கட்டியை வாங்கிக் கொண்டு சோதனை செய்தபோது அது போலி என தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நெசிலா கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மர்ம நபர் தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்ததில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த நிஜாம், உசேன் அலி, கிருஷ்ணமூர்த்தி மூவரும் தங்க கட்டி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரையும் தனிப்படையினர் தேடி வந்த நிலையில், பொள்ளாச்சி ஆழியார் ரோடு ஓம்பிரகாஷ் தியேட்டர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு தப்பிச் செல்ல இந்த மூவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மூவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தங்கக்கட்டி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மூவரிடம் இருந்து ரூபாய் 5 லட்சம் பறிமுதல்செய்த போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலி தங்கக்கட்டி மோசடி வழக்கில் விரைவாக குற்றவாளிகளை கைது செய்த போலிசாருக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டுக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *