• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!

குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் டிஎன்பிஎஸ் சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக அரசுப்பணியில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றது! எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் அரசுப் பணிகளில் உள்ள படிநிலைகளுக்கு ஏற்ப குருப் 1, குருப் 2, குருப் 4, விஏஓ உள்ளிட்ட பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பல்வேறு மாறுதல்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ்மொழித் தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழித் தாள் தகுதித் தேர்வாகவும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மொழித்தாளில் குறைந்தது 40 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்டி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின்படிதான் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, அதற்காக பாடத்திட்டத்தினை தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.in தளத்தில் வெளியிட்டுள்ளது.