மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூலப்புரம் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.,

இந்த கிராம சபை கூட்டத்தில் சூவப்புரம், செல்லாயிபுரம், உலைப்பட்டி, குன்னுவார்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.,
இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை எனவும் அடுத்த வாரம் கிராம சபை கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.,

சூலப்புரத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜேஜேஎம் திட்டத்தில் கட்டப்பட்ட குடி நீர் நீர்த்தேக்க தொட்டியில் இதுவரை தண்ணீர் ஏற்றாமல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை எனவும் ஆனால் குடிநீர் வரி மட்டும் ஊராட்சி நிர்வாகம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது., மேலும் குடிநீர் வரி கட்டாதவர்கள் 100 நாள் வேலை திட்டத்திற்கு பணி வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.,

சூலப்புரம், உலைப்பட்டி, குன்னுவார்பட்டி கிராமத்தில் கட்டிடங்கள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை எனவும், செல்லாயிபுரத்தில் பொதுக் கழிப்பறை கட்டப்பட்டதாகவும் அதற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை எனவும் இதுகுறித்து 4 கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இதுவரை செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.,
இன்று கிராம சபை கூட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதிகாரிகள் கிராம சபை கூட்டத்தை வேறு ஒரு நாள் நடத்தப்படும் என தெரிவித்தையடுத்து கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,




