• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தமிழ்த்தாய் வாழ்த்து; வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மரியாதை செலுத்தாத நிலையில் ரிசர்வ் வங்கியின் தமிழக மண்டல மேலாளர் எஸ்.எம் சாமி நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அலட்சியம் காட்டியுள்ளதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

இதைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று ரிசர்வ் வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத நிலையில் ரிசர்வ் வங்கியின் தமிழக மண்டல மேலாளர் எஸ்.எம் சாமி நிதியமைச்சரை நேரில் சந்தித்து விளக்கமளித்தார். இன்று மாலை ஆர்பிஐ சார்பில் விரிவான அறிக்கை ஒன்றும் வெளியாக உள்ளது.