• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் கடந்த அக்டோபர் மாதம் மர்ம நபர்கள் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைத்து பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதிகளிலும் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதை அடுத்து ஆனைமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது அடிப்படையில் சேத்துமடை அண்ணாநகரைச் சேர்ந்த முருகேசனை பிடித்து விசாரணை செய்ததில் அங்கலக்குறிச்சி சேர்ந்த ராமர், முத்துப்பாண்டி என்றவருக்கு குழந்தையை கடத்தி ரூபாய் 90,000விற்றது விசாரணையில் தெரியவந்தது. ஆனைமலை போலீசார் ராமர் முருகேசன் முத்துப்பாண்டி ஆகிய மூவரையும் கைது செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ராமர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு பரிந்துரை செய்ததின் பேரில் ராமரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.