• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சின்னார்பதி பகுதியில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சின்னார்பதி பகுதியில் பழங்குடியினர் மக்கள் நாற்பத்தி எட்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் வந்து சின்னார்பதி உள்ள மா கூந்தப்பனை வாழை போன்றவற்றை சாப்பிட்டது.

இதனையடுத்து வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர் இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதிக்குள் இருந்து மீண்டும் வந்த யானை வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் ஒய்யாரமாக நடந்து வந்து சின்னார்பதி பழங்குடியினர் வசிக்கும் இடத்துக்கு உணவு தேடி சென்றது.

தகவலறிந்து உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் இருந்து காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டி வனப்பகுதிக்குள் அனுப்பிவைத்தனர். நடுரோட்டில் யானை வந்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.