• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்றது

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு பெற்ற நிலையில், 21 காளைகளை அடக்கி கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. வரலாற்றில் முதல்முறையாக இந்த முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருபத்தியோரு காளைகளை அடக்கி கருப்பாயூரணி சேர்ந்த கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

இவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 19 காளைகளை அடக்கி ராம்குமார் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரது காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.