• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் முதல் சூனியகாரி படம் ஏவாள்

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.

இன்னொரு நாயகியாக கௌரி சர்மா இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும்பிரபல மாடல் பர்சிதா சின்காவும்இருக்கிறார்.இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார்.இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் இந்த ‘ஏவாள்’ படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர்தனது காதலியின் திடீர்மரணத்துக்குக் காரணம் முகம் மறைத்துத் திரியும் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மை நாயகனுக்குத் தெரிய வருகிறது.அவனைப் பழி வாங்க புறப்படுகிறான்நாயகன்.இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாடுகின்றன.இதன் பின்னணியில் பரபரப்பாகச் செல்கிற படம் தான் ‘ஏவாள்’.

இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ஏவாள் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை பொங்கல் தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.