• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பிக்பாஸ்அனிதா சம்பத் ஆசையை நிறைவேற்றும் சிவகார்த்திகேயன்

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அனிதா சம்பத். அதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாரிக்குடன் இணைந்து டைட்டிலையும் வென்றார் தொடர்ந்து சினிமா வாய்ப்புக்காக காத்திருப்பதாலோ என்னவோ சீரியல் வாய்ப்புகளையும் அவர் தவிர்த்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.


இந்தநிலையில்சிவகார்த்திகேயன் படத்தில் முக்கியமான வேடத்தில் அனிதா சம்பத் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல சிவகார்த்திகேயனுடன் அனிதா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்திலவெளியாகி உள்ளதுஅனேகமாக சிவகார்த்திகேயன் தெலுங்கில் நடிக்கும் படத்தில் அனிதா சம்பத் நடிப்பார் என தெரிகிறது.