விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 26) இவர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். திருமணம் முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

உடனடியாக பீரோவில் பார்த்தபோது ஒன்றறை பவுன் நகை மற்றும் ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜோதி ராஜன் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் மகேந்திரனின் நண்பர் சிவகாசி அருகே கல் போது கிராமத்தைச் சேர்ந்த ஜெய கனியிடம் (வயது 24) விசாரணை செய்ததில் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர்.



