• Sun. Nov 29th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசலில் சுவாமி தரிசனத்துடன் பணிகள் தொடக்கம்..,

ByKalamegam Viswanathan

Nov 29, 2026

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிகட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு , அலங்காநல்லூர் பகுதிகளில் கோலாகலமாக நடைபெறும்

2027 ம் ஆண்டுக்கான ஜல்லிகட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் ஜனவரி 15பாலமேட்டில் ஜனவரி 16 அலங்காநல்லூர் ஜனவரி 17ல்நடைபெற உள்ளது

இந்த நிலையில் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி வருகிற ஜனவரி 16 ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடத்தும் பொதுமகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி சார்பில் பாலமேடு மஞ்சலை ஆற்று திடல் வாடிவாசலில் அழைப்பிதழ் வைத்து சாமி தரிசனம் செய்து ஜல்லிகட்டு போட்டிக்கான பணிகளை இன்று முதல் மேற்கொள்ள உள்ளனர்.

பொதுமக்கள் முக்கிய விருந்தனர்கள் என அனைவருக்கும் ஜல்லிகட்டு அழைப்பிதழ் வழங்கும் பணிகளை இன்று முதல் விழா கமிட்டியினர் தொடங்கியுள்ளனர்

900 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களோடு ஜனவரி 16 ல் பாலமேடு ஜல்லிகட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.