• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பல்லாவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..,

ByPrabhu Sekar

Nov 28, 2026

விடுதலைச் சிறுத்தைகளின் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்புக்குழு சார்பில், மத்திய அரசைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தாதே, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் உடனே நடைமுறைப்படுத்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் திரு. திருநிர்மலை தமிழரசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை மாவட்ட பொருளாளர் நா. நிசார் அகமது ஒருங்கிணைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொடர்பாளர் ஆபிரகாம், மாவட்ட துணைச் செயலாளர் பல்லாவரம் ரமேஷ், சாலமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணைச் செயலாளர் வழ. தேவ அருள் பிரகாசம் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும், வி.ஆர். ஜெயந்தி, மோனிஷ் சுப்ரமணி ஆகியோர் கண்டன உரை ஆற்ற, எம்.ஐ.டி. கார்த்திக் நன்றியுரை கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.