• Tue. Nov 3rd, 2026

அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2026

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் போதையில்லாத இளைய சமுதாயத்தை உருவாக்கும்பொருட்டு காவல்துறை சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமைவகித்து போதைப் பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகளையும், பாதிப்புகளையும் எடுத்துக் கூறினார்.

கோ.புதூர் காவல் துணை சார்பு ஆய்வாளர் நித்யா அவர்கள் பேசுகையில் மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகிலோ, பள்ளியின் அருகிலோ போதைப்பொருட்கள் விற்பதையோ பயன்படுத்துவதையோ பார்த்தால் காவல்துறை, தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் காவலர்கள் கண்ணன், முத்துரத்தினவேல் உதவித்தலைமையாசிரியர் அல்ஹாஜ் முகமது, முதுகலை வேதியியல் ஆசிரியர் முகமது ஷெரீப், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள் போதைப்பொருட்களை ஒழிப்போம் வளமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் செய்தனர்.