• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் பங்கேற்பு..,

ByS. SRIDHAR

Oct 18, 2026

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஏ கே பி திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் இன்று (18.10.2026) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மு. அருணா, இ.ஆ. ப, அவர்கள் , மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.சியாமளா அவர்கள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. பிரகாஷ் அவர்கள், மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.